Random image

‘முத்தலாக்’ குற்றம்: அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டில்லி:

ஸ்லாமியர்களிடைய கடைபிடிக்கப்பட்டு வரும்  முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) குற்றம் என்ற அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஏற்கனவே முத்தாக் சட்டத்துக்கு பாராளுன்ற மக்களவையில் ஒப்புதல் கிடைத்த நிலையில், மாநிலங்களவை யில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டத்துக்கு அங்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவசர சட்டம் கொண்டுவர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்க கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

முத்தலாக் நடைமுறையைக் (Triple Talaq Ordinance) குற்றமாக கருதும் சட்டத்துக்கு  நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. லோக்சபாவில் முத்தலாகிற்கு எதிரான சட்டத்திற்கு சுலபமாக ஒப்புதல் வாங்கப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், எதிர்கட்சிகள் கோரிய திருத்தங்கள் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, ஏற்கனவே இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும், முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) மூலம், முஸ்லீம் ஆண்கள் மும்முரை ‘தலாக்’ என்று சொல்லி உடனடியாக விவகாரத்து (instant divorce) வாங்க முடியாது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள சட்டத்தின் மூலம், முத்தலாக்கை பின்பற்றுபவர்களுக்கு, அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

சட்ட மசோதாவில், பெண்ணுக்கு சம்பந்தமுடைய யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்ற நடை முறை இருந்தது. ஆனால், பெண்னோ அல்லது பெண்ணின் உறவினரோ தான் புகார் அளிக்கலாம் என்று பின்னர் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கணவர், இறங்கி வரத் தயாராக இருந்தால் சம்பந்தப்பட்டப் பெண் கொடுத்த புகாரை திரும்ப பெறலாம் என்ற நடைமுறையும் உள்ளது.

இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தற்போது  ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டப்படி உடனடி முத்தலாக் முறையில் பெண்களை விவாகரத்துச் செய்வது குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.