பாஜக வாய்ப்பளிக்குமா என்பதை விட நான் ஏற்பேனா என கேளுங்கள் : சத்ருகன் சின்ஹா

பாட்னா

ரும் பொதுத் தேர்தலில் எனக்கு பாஜக வாய்ப்பளிக்குமா என கேட்காமல் நான் அதை ஏற்பேனா என கேளுங்கள் என சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.

முன்னாள் பாலிவுட் கதாநாயகனான சத்ருகன் சின்ஹா பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். முந்தைய பாஜகவின் வாஜ்பாய் அரசில் சத்ருகன் சின்ஹா அமைசராக இருந்தார். அந்த கால கட்டத்தில் அவர் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்துள்ளர். கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்றதில் இருந்தே சத்ருகன் சின்ஹா அவர் நடவடிக்கைககளை விமர்நித்து வருகிறார்.

மத்திய அரசையும் பாஜகவையும் குறித்து அவர் விமர்சிக்கும் பல கருத்துக்கள் கட்சிக்குள் சலசலப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.. மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கட்சியில் இருந்து ராஜினாமா செய்த யஷ்வந்த் சின்ஹாவுடன் தற்போது சத்ருகன் மிகவும் நெருக்கமாக உள்ளார். நேற்று சத்ருகன் சின்ஹா பாட்னாவுக்கு வந்து நோய்வாய்ப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் ஐ சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அவர் பாஜகவை எதிர்த்து கருத்துக்கள் தெரிவிபதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு அலிக்குமா என கேட்டனர். அதற்கு சத்ருகன் சின்ஹா சிரித்துக் கொண்டே, ”எனக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்குமா என்பதை விட நான் அவ்வாறு வாய்ப்பு அளித்தால் ஏற்றுக் கொள்வேனா எனக் கேளுங்கள்” என பதில் அளித்தார்.

அத்துடன், “நான் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவை சந்தித்தது அரசியல் சந்திப்பு இல்லை. இது தனிப்பட்ட சந்திப்பு ஆகும். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோற்று மூன்று மாநிலஙக்ளில் ஆட்சியை இழந்துள்ளது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து பலர் வெளியேறி உள்ளனர். மேலும் பலர் வெளியேற தயாராக இருக்கின்றனர்.

தேர்தல்கலில் ஒரு நபர் ராணுவம், இரு நபர் ராணுவம் எதுவும் தோற்கடிக்கப் படலாம். இனி வெற்றி பெற மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி உள்ளிட்ட தலைவர்களை முன் நிறுத்த வேண்டும். பணமதிப்பிழப்பும் ஜி எஸ் டி அமலாக்கமும் கட்சிக்கு அவமானத்தை தேடி தந்துள்ளது. அதை போக்க இந்த தலைவர்களால் மட்டுமே முடியும்” என சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.