Random image

அதிமுகவில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம்: தங்கத்தமிழ் செல்வன்

சென்னை:

திமுகவில் மீண்டும் சேருவதற்கு பதில் மொட்டை  கிணத்துல விழுந்து சாகலாம் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிரடியாக கூறி உள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி கட்சியை சேர்ந்த தங்கத்தமிழ்ச்செல்வன், திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தோல்வி அடைந்தால், அனைவரும் அதிமுகவில் இணைந்து விடுகிறோம் என அதிமுக நிர்வாகிகளுக்கு சவால் விட்டார்.

அதைத்தொடர்ந்து தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் மீண்டும் இணையப்போவதாக வதந்தி பரவியது. மாநில அமைச்சர்களும் இதுகுறித்து சாடை மாடையாக பேசி வந்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன், தனது செய்தியை அமைச்சர் கடம்பூர் ராஜு குழப்பி விட்டார்….அதிமுகவில் இணைய தூது விடுவதாக வதந்தியை கிளப்புகிறார் என்று குற்றம் சாட்டினார்.

அதிமுக ஒரு மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அதிமுகவில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து சாகலாம் என்று அதிரடியாக கூறிய தங்கத்தமிழ் செல்வன்,  அதிமுகவில் யாருக்கும் தலைமை பண்பு என்பது கிடையாது. அதனாலேயே கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் இஷ்டத்துக்கு உளறுகிறார்கள் என்று கூறினார்.

மேலும,  ஆந்திராவில் பெட்ரோல்- டீசல் விலையில் ரூ.2 குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசுக்கு துணிச்சல் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.