டில்லி

சி பி எஸ் இ தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் சானிடைசர் கொண்டு வர வேண்டும் என விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சி பி எஸ் இ பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு சில இடங்களின் தேர்வுகள் மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நாடு முழுவதிலும் நடத்த வேண்டி உள்ளது.  வகுப்புத் தேர்வுகள் வடகிழக்கு டில்லியில் அப்போது நடந்த வன்முறை நிகழ்வுகளால் ஒரு சில பாடங்களுக்கு நடைபெறவில்லை.  12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நாடெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது.

இந்த தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதில் வடகிழக்கு டில்லிக்கான பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1, 2, 10 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது.   இந்த கால அட்டவணையில் மாணவர்களுக்கான பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவை பின் வருமாறு:

  1. அனைத்து தேர்வர்களும் அவரவர் கை சானிடைசர்களை அவரவர் வெளியே தெரியும் பாட்டில்களில் எடுத்து வர வேண்டும்.
  2. அனைத்து தேர்வர்களும் முகக் கவசம்  அல்லது துணியைக் கொண்டு தங்கள், மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்.
  3. சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்
  4. கொரோனா பரவுதலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பெற்றோர் சொல்லிக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
  5. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல்நலம் நன்கு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
  6. தேர்வு மையங்களில் அளிக்கப்படும் அனைத்து உத்தரவுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  7. அனும்திச் சீட்டில் காணப்படும் விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
  8. தேர்வு நேரங்கள் கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  9. விடைத் தாள்கள் காலை 10 மணி முதல் 10.15 மணிக்குள் அளிக்கப்படும்.
  10. வினாத் தாள்கள் காலை 10.15 மணிக்கு அளிக்கப்படும்.
  11. காலை 10.15 மணியில் இருந்து 10.30 மணி வரை தேர்வர்கள் கேள்வித் தாள்களைப் படிக்க வேண்டும்.
  12. காலை 10.30 மணிக்குத் தேர்வுகள் எழுதத் தொடங்க வேண்டும்.