சண்டிகர்:

திருடு போகும் வாகனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட இன்சூரன்R நிறுவனங்களிடம் புகார் அளிக்க தாமதமானால், அதற்கான காப்பீடு தொகை தர மறுப்பதா? என்று இன்சூரன்சு நிறுவனங்களுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது அநியாயமானது  என்றும் குட்டு வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியின் டிராக்டர் வாகனம் திருடுபோன நிலையில், அதுகுறித்து காவல்துறையில் புகார் பதிவு செய்ததுடன்,  அதை தேடி வந்தார். சுமார் 50 நாட்களாக தேடியும், வாகனம் கிடைக்காத நிலையில், அதுகுறித்து காப்பீடு நிறுவனத்துக்கு புகார் கொடுத்து, திருடு போனதற்கான காப்பீடு தொகை கோரி மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால், காப்பீடு நிறுவனம் அவருக்கு நஷ்டஈடு வழங்க மறுத்துவிட்டது. இது குறித்து பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் விவசாயி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிக்கு எதிராகவும், காப்பீடு நிறுவனத்துக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில், இதுபோன்ற வெறொரு வழக்கில், விசாரணை நடத்திய  நீதிபதிகள் வேறு தீர்ப்பு வழங்கினர்.

இந்த நிலையில் விவசாயி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  வழக்கை,  என்.வி.ரமணா, ஆர்.‌சுபாஷ் ரெட்டி, B.R. கவாய் ஆகிய மூன்று நீதிபதிகள்‌ கொண்ட பெரிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில்,  திருடு போகும் வாகனங்கள் பற்றி காப்பீட்டு நி்றுவனங்களுக்கு‌ தாமதமாக தகவல் தெரிவிப்பதை காரணமாகக் காட்டி, ‌அவற்றிற்கான காப்பீட்டுத் தொகையை தடுத்து நிறுத்துவது அநியாயமான‌, காரணமற்ற‌ செயல் என்றும், விவசாயிக்கு காணாமல் போன டிராக்டருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.