‘மாநாடு’ தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி செய்து கொடுத்த சுரேஷ் காமாட்சி…!

ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணா, மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் தப்பித்துள்ளனர்.

படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என பலதரப்பில் இருந்து கூறப்பட்டது .

இதனை முதன் முதலாகச் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது ‘மாநாடு’ படக்குழு.

மாநாடு’ படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் இன்சூரன்ஸ் செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி. 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் ப்ரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாயாகும். ‘மாநாடு’ படக்குழுவினரின் இந்த முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.