ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான போயிங் விமானத்திற்கு 660 கோடி காப்பீடு

கேரளா:
கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் போயிங்க் 737 விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளானதையடுத்து, உலகளாவிய காப்பீட்டாளர்களும், இந்திய காப்பீட்டாளர்களும் ரூபாய். 660 கோடி காப்பீடாக செலுத்தியுள்ளனர். இது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒன்றாகும்.

மறு காப்பீட்டாளர்களுக்காக மொத்தம் 89 மில்லியன் டாலரும், இழப்பீட்டிற்க்காக 51 மில்லியன் டாலரும், பாதிக்கப்பட்டவர்களுக்காக 38 மில்லியன் டாலரும், கொடுக்கப்பட்டுள்ளது என்று என்ஐஏ அதிகாரி அதுல் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சார்பில் என்ஐஏ, ஏர் இந்தியாவிற்கு ரூபாய். 373.33 கோடியை செலுத்தியுள்ளது. இந்திய விமான காப்பீட்டு சந்தையில் இது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ஒன்றாகும்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி துபாயிலிருந்து கொழும்பிற்கு வந்த ஏர் இந்தியா விமானம் இரவில் தரையிறங்கும் போது, 35 அடி கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து துண்டுகளாக உடைந்தது, இந்த விபத்தில் விமானி உட்பட 21 பேர் உயிரிழந்து மற்றவர்கள் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர், மேலும் இந்திய காப்பீட்டு கழகம் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு 3.50 கோடி செலுத்தப்படும் என்று அதுல் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பயணிகளின் விவரக்குறிப்பு மற்றும் ஆவணங்களை மதிப்பீடு செய்த பின் அவர்களுக்கு காப்பீடு செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.