காந்திநகர்:

திரிபுரா முதல்வரின் சர்ச்சை பேச்சு சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்களில் கவனமாக பேசுங்கள் என்று மோடி பாஜக.வினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் தற்போது குஜராத் சபாநாயகரின் பேச்சு மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிராமின் பிஸினஸ் மாநாட்டில் குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘அம்பேத்கரை பிராமிண் என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை. அம்பேத்கரின் முதற் பெயர் பாபாசாகேப். அது அவருடைய ஆசிரியரின் பெயராகும். அறிவார்ந்த எல்லாரும் பிராமணர்கள் என்பதால் அம்பேத்கரும், பிரதமர் மோடியும் கூட பிராமணர் தான்” என்றார்.

ராஜேந்திர திரிவேதியின் இந்த பேச்சுக்கு அம்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.