டில்லி

சீன செயலிகளான ஜூம், டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 52 செயலிகளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை கோரிக்கை அளித்துள்ளது.

சீன மொபைல் செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.  ஜூம் என்னும் வீடியோ அழைப்பு செயலி மீது உலக அளவில் கடும் புகார்கள் எழுந்ததால்  கடந்த ஏப்ரல் மாதம் தைவான், ஜெர்மன் நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை இந்த செயலியை உபயோகிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தியது.

இதையொட்டி இந்தியாவும் இந்த ஜூம் செயலி பயன்பாட்டை மிகவும் குறைக்க வேண்டும் அல்லது அடியோடு நிறுத்த வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டது.  இதையொட்டி இந்த செயலி நிறுவன இந்தியத் தலைவர் சமீர் ராஜா மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் புலனாய்வுத் துறை 52 சீனச் செயலிகளைப் பட்டியலிட்டுள்ளது.   இந்த செயலிகள் பாதுகாப்பற்றவை எனவும் இவற்றின் மூலம் பயனாளிகளின் விவரங்கள் வெளிநாட்டுக்கு செல்லக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.  ஆகையால் இந்த 52 சீன மொபைல் செயலிகளையும் முழுமையாகத் தடை செய்யவோ அல்லது மக்கள் பயன்படுத்துவதை தடுக்கவோ நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 52 செயலிகளில்,

டிக்டாக், வால்ட் ஹைட், விகோ வீடியோ, பிகோ லைவ், வைபோ, விசாட், ஷேர் இட், யுசி நியூஸ், யுசி பிரவுசர், பியூட்டி பிளஸ், ஸெண்டர், கிளப் ஃபாக்டர், ஹெலோ, லைக், குவாய், ரோம்வி, ஷீன், நியூஸ் டாக், போட்டோ வொண்டர், ஆபஸ் பிரவுசர், விவா விடியோ – கு வீடியோ,

பெர்ஃபக்ட் கார்ப், சி எம் பிரவுசர், வைரஸ் கிளீனர், மி கம்யூனிட்டி, டியு ரிகார்டர், யுகேம் மேக்அப், மி ஸ்டோர், 360 செக்யூரிட்டி, டியூ பேட்டரி சேவர், டியூ பிரவுசர், டியூ கிளீன்ர், டியூ பிரைவசி, கிளீன் மாஸ்டர் சீட்டா, கேச் கிளியர் டியூ செயலிகல், பைடு மொழிபெயர்ப்பு, பைடு மேப், வொண்டர் காமிரா,

இஎஸ் ஃபைல் எக்ஸ்ப்ளோரர், கியுகியு இண்டர்நேஷனல்,கியுகியு லான்ச்ர், கியுகியு செக்யூரிடி செண்டர், கியுகியு பிளேயர், கியுகியு மியூசிக், கியுகியு மெயில்ல், கியுகியு நியூஸ்ஃபீட், விசின்க், செல்ஃபிசிடி, கிளாஷ் ஆஃப் கிங்ஸ், மெயில் மாஸ்கர், மி வீடியோ கால்,பாரலல் ஸ்பேஸ்

ஆகியவை அடங்கும்.