முதல்வர்களுக்கு ஆபத்து!: உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி:

மாநில முதல்வர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது, அந்தந்த மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

மாநில முதல்வர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.