வாஷிங்டன்:

லக வல்லரசான அமெரிக்கா இன்று கண்ணுக்கு தெரியாத வைரசால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,  4,500 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுதபலத்தால் உலக நாடுகளை மிரட்டி பணிய வைத்து வந்த அமெரிக்கா இன்று சிறு வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்து வருகிறது.  உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள சீனாவின் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் தனது ஆட்டத்தை தீவிரப்படுத்தி, சின்னப்பின்னமாக்கி வருகிறது.

இன்றைய நிலவரப்படி,   உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு   இறப்பு எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை  34,641 பேர் கொரோனா தாக்குதலில்  இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக, 4,491 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக நியூயார் மாகாணத்தில் மட்டும் 12ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை, 6 லட்சத்து 78ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில் நோய் தொற்றில் இருந்து  57ஆயிரத்து 844 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.