இன்று நாகை வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்! மாவட்ட எல்லைகளில் தீவிர பாதுகாப்பு

வேளாங்கண்ணி:  நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றம் இன்று (ஆகஸ்டு 29ந்தேதி) நடைபெற உள்ள நிலையி, பக்தர்கள் வருகையை தடை செய்யும் வகையில், மாவட்ட எல்லைகளில் தீவிரப்பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிரசித்திபெற்ற நாகை வேளாங் கண்ணி மாதா பேராலயம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா முடக்கம் காரணமாக,  வெளி இடங்களில் இருந்து பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகமும்  எளிமையான முறையில் திருவிழா நடைபெறும் என அறிவித்து உள்ளது.
இன்று கொடியேற்றப்பட்டு, திருவிழா தொடங்கும் நிலையில் கொரோனா சூழல் காரணமாக, நாகைக்கு பக்தர்கள் வருகையை தடை செய்யும் வகையில், மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர். அந்த பகுதியில்,  21 சோதனை சாவடிகள் அமைத்து 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.