மற்ற இனத்தவர், ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆணையொ, பெண்ணையோ திருமணம் செய்தால்  1 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு ரு .50,000 ஆக வழங்கப் பட்டு  வந்த ஊக்கத்தொகையை உயர்த்தி  இனி ரூ 1,01,000 வழங்க மாநில அரசு அறிவித்துள்ளது.
intercaste 2
இனி  ஒரு தாழ்த்தப்பட்ட பையன் அல்லது பெண்ணைத் திருமணம் செய்தால் “முதலமைச்சர் திட்டத்தின் கீழ், ரூ 1,01,000  மானியம் வழங்கப்படுமென தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான துறையின் அமைச்சர் கிருஷ்ணன் குமார் தெரிவித்தார்.
intercaste marriage1
இது தவிர,  தாழ்த்தப் பட்ட பெண்கள் மானியம், சீர்மரபினர் பழங்குடியினர் மானியம் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் சமூகத்தின் அனைத்து பிரிவு விதவைகள்  பெற்று வரும் உதவித்தொகை ரூ .31,000 இருந்து ரூ 41,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது  என்றும் அவர் கூறினார்.
இப்போது 2.5 ஏக்கர் குறைவாக  நிலம் மற்றும்  வருடத்திற்கு ரூ 1 லட்சம் மிகாமல் வருமானம் உள்ள  குடும்பங்கள் அனைத்திற்கும் ரூ .11,000  வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.