வாணியம்பாடி & ஆம்பூர் தொகுதிகள் தொடர்பான ஒரு சுவாரஸ்யம்!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான ஒரு சுவாரஸ்யம் உள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளுமே புதிதாக பிரிக்கப்பட்ட வடஆற்காடு திருப்பத்தூர் மாவட்டத்தைச் ச‍ேர்ந்தவை மற்றும் கணிசமான முஸ்லீம் வாக்காளர்களைக் கொண்டவ‍ை.

வாணியம்பாடி தொகுதியைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியில் அத்தொகுதி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பாக முகமது நயீம் போட்டியிட்டார். பிரதான எதிர்க்கூட்டணியில் அதிமுக சார்பாக செந்தில்குமார் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் வென்றவர் செந்தில் குமார்.

ஆம்பூர் தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுகவின் நஜர் முகமது போட்டியிட்டார். திமுக சார்பில் வில்வநாதன் போட்டியிட்டார். ஆனால், வென்றவர் திமுகவின் வில்வநாதன்.

ஆக, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் 2 தொகுதிகளில், தமிழகத்தின் பிரதான கூட்டணிகளில், ஒரு தொகுதியில் முஸ்லீமும், மற்றொரு தொகுதியில் இந்துவுமாக மாறி மாறி நிறுத்தப்பட்டனர்.

ஆனால், இரண்டு தொகுதிகளிலுமே, பிரதான கூட்டணிகளின் முஸ்லீம் வேட்பாளர்கள் தோற்று, இரண்டிலும் இந்துக்களே வென்றுள்ளனர்!