சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் தொடங்கப்படுவதாகவும்,  வறுமைக் கோட்டைச்சேர்ந்த குடும்பங்களின்  குடும்ப தலைவர் இயற்கையாக உயிரிழந்தால், அந்த குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருப்பதால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி,   மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ திட்டம்  தொங்குவது  குறித்து  சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்றும். வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சிறப்புத் திட்டம்.  இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்திறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்களுக்கு குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும், அதுபோல, நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அத்துடன்  காப்பீட்டுத் திட்டத்திற்கான நிதியை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.