விஜய் நடிக்கும் ’மாஸ்டர்’ படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் முடிந்து ரிலீசுக்கு ரெடி என்றாலும், கொரோனா லாக்டவுனில் தியேட்டர்கள் மூடியிருப்பதால் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் ’குட்டி ஸ்டோரி..’ பாடல் உள்ளிட்ட எல்லா பாடல்களும் வெளியாகி ஹிட்டாகி இருக்கிறது. மற்றொரு பாடலான ’வாத்தி கம்மிங்’ பாடலும் யூ டியூபில் பட்டய கிளப்பி வருகிறது. தற்போது உலக அளவில் வாத்தி கம்மிங் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. அப்பாடலுக்கு சர்வதேச பிரபலம் ஆடம் மோர்லே (Adam Morley) டிவிட்டரில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.


லவ் இட் ’வாத்தி கம்மிங், கிரேட் ஒர்க்’ என பாராட்டிய அவர் அதனை விஜய்க்கு டேக் செய் திருக்கிறார். உலக அளவிலான சாதனையாளர் களை தேர்வு செய்து விருது வழங்கும் IARA அமைப்பின் தூதராக உள்ளார் ஆடம் மோர்லே. அவரது பாராட்டு மெசேஜை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி உள்ளனர்.


இதற்கிடையில் விஜய்யின் மாஸ்டர் மட்டுமல்லா மல் சூர்யா நடித்திருக்கும் சூரரைப்போற்று, தனுஷ் நடித்திருக்கும் ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பெரிய படங்கள் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கின் றன. கொரோனா முடிந்த ஊரடங்கு முடிந்தபிறகும் தியேட்டர் திறப்பு பற்றி அரசு எதுவும் சாதகமான பதிலை இதுவரை கூறாதது தியேட்டர் அதிபர் களையும், தயாரிப்பாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பல கோடி முதலீடு போட்டு தயாரித்த படங்கள் ரிலீஸ் செய்ய முடியாததால் அதற்கான வட்டி தர முடியவில்லை எனவே பட ரிலீசுக்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணமிருக்கின்றனர்.