கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும்…..போப் பிரான்சிஸ்

வாடிகன் சிட்டி:

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணையாக நின்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘கனமழை காரணமாக கேரளா மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. மழையில் சிக்கியும், நிலச்சரிவாலும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள சகோதர, சகோதரிகளுக்கு சர்வதேச சமுதாயம் உறுதுணையாக நிற்க வேண்டும். அங்கு தேவைப்படும் அனைத்து உதவிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.