டில்லி

ந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாத்வுக்கு பாகிஸ்தான் ராணுவம் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை செய்துள்ளது

`

.கடந்த 2017 ஆம் வருடம் ராணுவ நீதிமன்றம் இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்திய அரசு தண்டனையை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இன்று இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பில் சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்துள்ளது. அத்துடன் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டதால் பாகிஸ்தான் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கி உள்ள சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு 15:1 என்ற விகிதத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே குல்பூஷனுக்கு முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவாக இருந்தார். அவர், “இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்து இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். ஜாதவ் வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதற்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என அறிவித்துள்ளார்.