சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு பிப்ரவரியில் விசாரணை

நியூயார்க்

பாகிஸ்தான் அரசால் மரண தண்டனை அளிக்கப்பட்ட இந்தியரான குல்பூஷன் ஜாதவ் வழக்கு வரும் பிப்ரவரி மாதம் சர்வதேச் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  அவரை பலுசிஸ்தான் மாநிலத்தில் கைது செய்ததாகவும், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான சதி திட்டத்தில் ஈடுபட ஈரானில் இருந்து ஊடுருவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கி விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்  கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனி விதித்தது.   இந்தியா அதே வருடம் மே மாதம் இந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்தது.

தற்போது சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முத 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.   அத்துடன் இந்த விசாரணையானது நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்திலும் ஐ நா இணையதள தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.