சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை நிர்வாகி அடுத்த ஆண்டு பதவி விலகல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து டேவிட் ரிச்சர்ட்சன் அடுத்த ஆண்டு பதவி விலக உள்ளார். டேவிட் ரிச்சர்ட்சன் 2012ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் போட்டுள்ள ஒப்பந்தங்கள் முடிவடையும் நிலையில் பதவி விலக உள்ளார். அதனை தொடர்ந்து கிரிக்கெட் உலகின் சர்வதேச போட்டிகளை கண்காணிக்கும் பொறுப்பை அவர் ஏற்க உள்ளார்.
-richardson
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கோப்பை போட்டிக்கு பத்து அணிகளை குறைக்கவும், ஒருநாள் லீக் போட்டிகளை நடத்தவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவும் அண்மையில் திட்டமிட்டது. இந்நிலையில் அனுமவமிக்க, நிதானமாக செயல்படும் ரிச்சர்ட்சனை மாற்றுவது நன்றாக இருக்காது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரிச்சர்ட்சன் தனது பதவிக்காலம் முடிவதற்குள் வர்த்தக ரீதியாக நிதிகளை அதிகரித்துள்ளதுடன், எட்டு ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தங்களை கடைப்பிடித்து வந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு நிதியுதவி வழங்கவும், விமர்சனங்களை வழங்கவும் ஐயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு புதிய குழு உறுப்பினர்களை உருவாக்கினார்.

தனது பதவிக்காலம் முடிவது குறித்து ரிச்சர்ட்சன் கூறுகையில் “ கிரிக்கெட்டில் இருந்து ஒருவர் பதவி விலகுவது கடினமான ஒன்று. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கிரிக்கெட் உலக கோப்பை போட்டி நிறைவடைந்த உடன் நான் பதவி விலகுவது சரியானது. சர்வதேச கிரிகெட் போட்டிகளின் போது நான் முழுமையாக செயல்பட்டதுடன், சமீப காலத்தில் நான் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மகிழ்ச்சியை அளித்தன. விளையாட்டு துறையில் உயர்ந்த இடத்தை அடைவதற்கான பாதைகளையும், பாதுகாப்புகளையும் வீரர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று அவர் உணர்ச்சி பொங்க கூறினார்.

அடுத்து நான் பணியாற்ற உள்ள 12 மாதங்களை அர்பணிப்புடன் செயல்பட்டு உலக கோப்பை போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பேன் என்று ரிச்சர்ட்சன் கூறினார். மேலும், கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர், தற்போதைய நிர்வாக இயக்குனர், தலைமை அதிகாரிகள், மூத்த குழு உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.