இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

--

சென்னை:

ன்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்,  சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசின் அரசாணை நகலை எரித்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையம் முன்பு, மத்திய அரசு திட்டப்படி கல்வி, வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஓதுக்கீடு தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து. அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்த அவர்கள், ஆணையக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தமிழக அரசின் அரசாணையை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் கூறும்போது, மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டத்தின் மூலம் பல சலுகைகள் கிடைக்க  வாய்ப்பு உள்ளது.  அந்த சட்டத்தின்படி அரசு வேலைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் பகுதி நேர ஊழியர் களாக பணியாற்றிய மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் காரணமாக கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.