இந்தியாவிற்கு குறுகிய காலம் இயக்கப்படவுள்ள வெளிநாட்டு விமானங்கள்!

--

புதுடெல்லி: குறிப்பிட்ட நாடுகளுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிற்குள் சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படவுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டின் ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம், பாரிஸ் – டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு இடையில் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜூலை 17 முதல் 31 வரையில், இந்திய நகரங்களுக்கு 18 விமானங்களை இயக்கவுள்ளன. அதேசமயம், இந்த விமானப் போக்குவரத்து தொடர்பாக பல கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜெர்மனியிலிருந்தும் விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளன. “இந்த வெளிநாட்டு விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், 3 நாடுகளுடன் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன” என்றுள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.