டெல்லி: சர்வதேச விமானங்கள் ஏப்ரல் 15 க்குப் பிறகு அவை எங்கிருந்து வருகின்றன என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இதனை தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை வீட்டிற்கு அழைத்து வரும் விமானங்கள் 21 நாள் ஊரடங்கு நீக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

ஏப்ரல் 15 வரை ஊரடங்கு இருக்கிறது. அதன்பிறகு, அவை எங்கிருந்து வருகின்றன என்பதை பொறுத்து, விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதை பரிசீலிக்க உள்ளோம் என்று கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 14 வரை இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.