அசுரன்’ படத்தின் அசுரத்தனமான வெற்றியால் இயக்குநர் வெற்றிமாறன் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ‘பிலிம் கமெண்ட்’ (Film Comment) என்ற மாத இதழ் 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மாத இதழ் அமெரிக்காவின், நியூயார்க் மாநிலத்தில் இருந்து வெளியாகிறது.

உலக அளவில் பிரபலமான இந்த பத்திரிகையில் இயக்குநர் வெற்றிமாறன் பற்றிய கட்டுரை வெளியாகியிருக்கிறது .

இந்த தகவலை, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.