சர்வதேச விண்வெளி மையத்தில் விண்கல் வீழ்ந்து துளை – சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள்

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதியதல் சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது. விண்கல்லால் ஏற்பட்ட துளையை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

space

விண்வெளி ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளது. நிலத்திலிருந்து சுமார் 360 கி.மீ. உயரத்திற்கு அப்பால் இந்த விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டு பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஆய்வு மையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் கால அடிப்படையில் இரண்டு விண்வெளி வீரர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவுகள், உபகரணங்கள் வானுர்தி மூலம் பூமியில் இருந்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விண்கல் ஒன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மோதியது. இதனால், 2 மி.மீ. அளவிலான சிறிய துளை சர்வதேச விண்வெளியில் ஏற்பட்டது. இதையறிந்த விண்வெளி வீரர் அலெக்ஸ், முதற்கட்ட சீரமைப்பு பணியை மேற்கொண்டார்.

விண்கல்லால் ஏற்பட்ட துளையை அடைக்காமல் விட்டால், ஆய்வு மையத்திலிருந்து காற்று வெளியேறிவிடும் என்றும், அதனால் வீரர்களுக்கும், ஆய்வு மையத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றும் விண்வெளி ஆய்வு மையம் மூலமாக எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து, ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.