சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) 

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல்முறையாக சர்வதேச யோகா தினம் டில்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

அதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு ஆசனங்களைச் செய்து விழாவைச் சிறப்பித்தார்.

இதில் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த 35,985 பேர் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதேபோல் கடந்த ஆண்டு பிரதான யோகா நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.

இந்நிலையில், 3-வது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படுகிறது. திட்டமிட்டபடி நாடு முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்டமாக சர்வதேச யோகா தினம் நடைபெற்றது.  தலைநகர் லக்னோ வில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெறும் பிரதான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உ.பி. முதல்வர் யோகியுடன் இணைந்து யோகா செய்தார்.

இன்று அதிகாலை முதலே பல இடங்களில் மழை தூறிக்கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தா மல் யோகா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் ஒரே மேடை யில் தோன்றி யோகா செய்தனர்.

அதைத்தொடர்ந்து விழாவில் மோடி பேசியதாவது,

‘இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் யோகா மையங்களின் எண்ணிக்கையும் ஆசிரியர்கஎளின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல பிற நாடுகளிலும் யோகாவின் தேவையும், மதிப்பும் பெருமளவு உயர்ந்துள்ளது ’ என்றார்.