சர்வதேச யோகா தினம்: யோகா ஆசனங்களை முகத்தில் வரைந்த உ.பி. பள்ளி மாணவிகள்

லக்னோ:

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உ.பி. பள்ளி மாணவிகள் 4 பேர் தங்களது முகத்தில் யோகா படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. யோகாவின் முக்கியத்துவம் உலக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உ.பி. பள்ளி மாணவிகளின் யோகா குறித்த விழிப்புணர்வு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி  விடுத்த வேண்டு கோளைத் தொடர்ந்தே ஜூன் 21-ஆம் நாளை உலக யோகா தினமாக ஒரு தீர்மானத்தின் மூலம் அங்கீகரித்து.

யோகா,  உடலுக்கும் உள்ளத்திற்கும் நிலைத்தன்மையை தருகின்றன. . ஒவ்வொரு ஆசனமும் வெவ்வேறு பலன்களைத் தரும்.  யோகா மூலம் செய்யப்படும்  ஆசனங்கள்  பல்வேறு வாழ்க்கை முறை நோய்களையும் கோளாறுகளையும் கட்டுப்படுத்துவதால் யோகா இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்று வருகிறது. உள்ளம் மற்றும் உணர்ச்சிக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துவதில் அது மிகவும் உதவிகரமாக உள்ளது.

உடல்பருமன், நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம், மனக்கலக்கம் ஆகிய ஆரோக்கியப் பிரச்சினைகள் பரவலாக இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் யோகா ஒரு முழுமையான சுகாதார நடைமுறையாகும். நீரிழிவு, சுவாசக் கோளாறுகள், இரத்த அழுத்தம், வாழ்க்கைமுறை குறைபாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த யோகா உதவுகிறது. மனவழுத்தம், களைப்பு, மனக்கவலை போன்ற கோளாறுகளைக் குறைக்கவும் யோகா துணை புரிகிறது

இதனால், இன்று உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா பயிலப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 4 பேர், அவர்களின் முகத்தில் யோகா ஆசனங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.