சென்னை:

திமுக தொடர்பான டெல்லி முறைகேடு தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில், கிராமங் களுக்கு பைஃபர் ஆப்டிக்கேபிள் புதைப்பது தொடர்பான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி  வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது, மனுவில், 12,524 கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க ரூபாய் 1,950 கோடிக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பெரும்பாலான நிறுவனங்களை நிறுத்தி வைத்து விட்டு இரண்டு நிறுவனத்துக்கு மட்டும் டெண்டர் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரூ.1950 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (16/06/2020) விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதிகள், முதல்வர் பழனிசாமி, அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதியக்கோருவது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஜூன் 18- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.