டில்லி

ந்தியாவில் இண்டர்நெட் சேவை தொடங்கி நேற்றுடன் 22 ஆண்டுகள் முடிவடைந்தது.

இண்டர்நெட் என்னும் இணையதள சேவை இந்தியாவில் விதேஷ் சஞ்சார் நிகம் மூலமாக 1995 ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது.

நேற்றுடன் 22 ஆண்டுகள் முடிவடைந்தது.

தற்போது இண்டர்நெட் அவசியத்தேவை ஆகிவிட்டது.   ஆனால் அப்போது ஒரு சில கார்பரேட் கம்பெனிகளும், சில பெரு முதலாளிகளும் மட்டுமே உபயோகித்து வந்தனர்.

அப்போது இந்த சர்வீஸ் கொடுத்தது வி எஸ் என் எல் நிறுவனம் மட்டுமே.

இந்தியாவில் இண்டர்நெட்  –  சில முக்கிய நிகழ்வுகள்

1995 – வி எஸ் என் எல்  நிறுவனம் இண்டர்நெட்  சேவையை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தியது.

1996 –   இண்டெர்நெட் கஃபே மும்பையில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. ரெடிஃப்.காம் இணைய தளம் தொடங்கப்பட்டது   தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட பிரபல ஆங்கில நாளிதழ்கள் இணையதளங்களை தொடங்கின.

1997 – தினமணி நாளிதழ் தனது இணையதளத்தை தொடங்கியது.  இணையவழி வங்கி சேவையை ஐசிஐசிஐ வங்கி தொடங்கியது.

1998 –  இளைஞர்கள் சிலர், பாபா அணு மின் நிலையத்தின் தகவலை சர்வரில் இருந்து திருடியதாக வழக்கு பதியப்பட்டது.

1999 – இந்தி இணையதளமான வெப்துனியா, மற்றும் பல இந்திய மொழிகளில் இணையதளங்கள் வர தொடங்கின   இணைய ரயில்வே முன்பதிவு முறை இந்த வருடத்தில்  அறிமுகமாகிறது

2000 – இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம் நிறைவேற்றத்தை தொடர்ந்து யாஹூ, எம்.எஸ்.என் போன்ற இணையதளங்கள் தமது இந்தியா பதிப்பை  வெளியிடுகின்றன.

2003 –  விமான பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இணையதளம்,தமிழ் விக்கிப்பிடீயா தொடக்கம்

2004 –  கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது கிளை அலுவலகத்தை நிறுவுகிறது.   பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைய சேவையை அறிமுகம் செய்கிறது

2005 – இந்திய மொழிகள் கொண்ட செல்பேசிகள், ஆர்கு சமூக வலைதளம் ஆகியவை அறிமுகம்

2006 – ஃபேஸ்புக் சேவை  பயன்பாட்டுக்கு வருகிறது
2007 – கூகுள் செய்திகள் சேவையில் முதல் இந்திய மொழியாக இந்தி மொழி அறிமுகம்

2008 – கூகுள் செய்திகள் சேவையில் இந்திய மொழிகள் வரிசையில்ல் தமிழ் மொழி அறிமுகம்;  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு

2009 – இந்திய மொழிகளுக்கான இணைய முகவரி தொடர்பாக வரைவு கொள்கையை முன்னெடுக்கப்படுகிறது

2010 – 3ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது   ஃபேஸ்புக் பயன்பாடு அதிகரிக்கிறது.

2012 – கொல்கத்தாவில் 4ஜி சேவை முதன்முறையாக அறிமுகம்

2013 – இந்தியாவில் இணைய வணிகம் உச்சத்துக்கு உயர்ந்தது

இது வெறும் சாம்பிள் தான்

1995ல் இண்டர்நெட் தொடங்கப்பட்ட சமயத்தில் வெளியிடப்பட்ட ரேட் கார்ட் இதோ உங்கள் பார்வைக்கு