சென்னை:

இணையதள சேவை முடக்கத்தை கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்ற கலெக்டர் அறிவிப்பை நம்பிவிடக் கூடாது. இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இணையதள சேவை முடங்கியதால் 3 மாவட்டங்கள் பாதித்துள்ளது.

3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். தமிழ்நாட்டை ஏதோ கலவர பூமி போல் சித்தரித்து சிறுமைப்படுத்தாதீர். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட துறைமுகப் பணிகள் தேங்கியுள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றம் பாதித்து வணிக நிறுவனங்கள் செயலிழந்துள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.