இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!

--

 

சென்னை:

ந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது.

மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா முழுவதும் இன்டர்ட் பயன்படுத்துவது பற்றிய  ஆய்வு நடத்தியது.

net

அதில்,  இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 14.975 கோடி பேர் என்று குறிப்பிட்டுள்ளது.

அதில், 1.489 கோடி பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறது  டிராய் அமைப்பு. கடந்த மார்ச் மாதம் வரையிலான புள்ளி விவரங்கள் அடிப்படையில் இன்டர்நெட் பயனாளர்கள் எண்ணிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு – 1.489 கோடி பேர்

மகாராஷ்டிரா – 1.382 கோடி பேர்

கர்நாடகா – 1.218 கோடி பேர்

டெல்லி – 1.198 கோடி பேர்

ஆந்திரா –  1.117 கோடி பேர்

அதேபோல், கிராமங்களில் இணையத்தின் பயன்பாடு ஹிமாச்சல் பிரதேசம் (28.05%) தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் (27.15%) இரண்டாமிடமும், தமிழகம் (24.03%) மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

தமிழகத்தில் இணைய பயன்பாடு அதிகரிக்க, மின் ஆளுமை திட்டங்கள் அதிகரித்திருப்பதே காரணம் என்கின்றனர்.

அதாவது, அரசு திட்டங்கள், மின் கட்டணம், வரி வசூல் உள்ளிட்டவை இணையதளங்கள் மூலமே பரிவர்த்தனையாகின்றன. இதற்காக தமிழகத்தின் நகரங்களில் அரசு இசேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டமும் இணைய பயன்பாட்டை அதிகரிக்க காரணமென்கின்றனர்.

உலகளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதலிடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் அமெரிக்காவும் உள்ளன.