மெகுல் சோக்சி குடியுரிமை கோரும் போது புகார் இல்லை : ஆண்டிகுவா பிரத்மர்

ண்டிகுவா

மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டு குடியுரிமை கோரிய போது அவர் மீது இண்டர்போல் புகார் அளித்திருக்கவில்லை என ஆண்டிகுவா பிரதமர் கூறியுள்ளார்.

வங்கி மோசடி காரணமாக சிபிஐ நடவடிக்கைகளுக்கு பயந்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சி ஆகியோர் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு தப்பிச் சென்று விட்டனர்.    அவர்களை விசாரணைக்கு அழைத்து வர சிபிஐ முயன்று வருகிறது.     ஆனால் இது வரை அந்த முயற்சி நடக்கவில்லை.

இந்நிலையில் மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசிப்பதாக தகவல்கள் வந்தன.   மெகுல்சோக்சி மீது ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இண்டர்போலிடம் அமலாக்கப்பிரிவு கூறி உள்ளது.   அதனால் இண்டர்போல் மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டில் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் அவருக்கு குடியுரிமை வழ்ங்கியது பற்றியும் ஆண்டிகுவாவுக்கு கேள்விகள் எழுப்பியது.

இந்நிலையில் ஆண்டிகுவா நாட்டின் பிரதமர் கேஸ்டப் பிரவுன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில், “மெகுல் சோக்சி இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றிருக்கலாம் என நினைக்கிறேன்.  இந்தியா அவர் மீதுள்ள குற்றச்சாட்டை அனுப்பி உள்ளதால்  அங்கு அவரை அமெரிக்க அரசு தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் அமெரிக்கா எச்சரிக்கை அளிக்கவில்லை.

அதே போல் மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை கோரும் போது இண்டர்போல் அவரைப் பற்றிய எந்த ஒரு எச்சரிக்கையும் அறிவிப்புக் அளித்திருக்கவில்லை.   அதனால் எங்கள் அரசுக்கு இது பற்றி தெரியாது.   அதை ஒட்டி அவருக்கு குடியுரிமை வழங்கியது.  ஆண்டிகுவா குடிமகன் என்னும் முறையில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டிகுவா அரசு இந்த அரசுக்கு மெகுல் சோக்சியை பிடிப்பதற்கு உதவ தயாராக உள்ளது.   அவரை தேடும் முயற்சியில் எங்கள் நாடு தீவ்ரமாக ஈடுபட்டுளது.   இந்தியாவுடன் எங்களுக்கு குற்றவாளிகள் குறித்த ஒப்பந்தம் எதுவும் இல்லை.    இருந்தாலும் இந்தியாவுக்கு இந்த விவகாரத்தில் உதவ தயாராக இருக்கிறோம்.”  என தெரிவித்துள்ளார்.