இண்டர்போல் அமைப்பின் தலைவர் மாயம் : பிரெஞ்ச் போலிஸ் தேடுதல் வேட்டை

லியான், பிரான்ஸ்

ண்டர்போல் அமைப்பின் தலைவர் மெய்ங் ஹாங்வாயை காணவில்லை என அவர் மனைவி புகார் அளித்துள்ளார்.

இண்டெர்போல் என்பது (The International Criminal Police Organization – INTERPOL) சர்வதேச அளவிலான குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்காக கொண்டு 1923 ம் வருடம் உருவாக்கப்பட்ட உலகலாவிய காவல்துறை அமைப்பு ஆகும். இது 192 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது

இந்த சர்வதேச காவல்துறையான இண்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்வெய் சீன நாட்டை சேர்ந்தவர் ஆவார்.    இண்டர்போல் தலைமை அலுவலகம் பிரான்சின் லியான் நகரில் அமைந்துள்ளது.   அங்கு இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.  இவர் சீனாவின் பாதுகாப்பு துணை அமைசராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவுக்கு சென்றிருந்தார்.   அதன் பிற்கு இவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என இவர் மனைவி புகார் அளித்துள்ளார்.   இவருடைய அலைபேசிக்கு அழைத்த போது பதில் ஏதும் கிடைக்காமல் உள்ளது.  இதை ஒட்டி பிரஞ்சு போலிஸ் இவரை தேடி வருகிறது.

சீன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அவர் மீது ஏற்கனவே புகார்கள் இருந்து வந்துள்ளது

சர்வதேச காவல்துறை தலைவர் காணாமல் போனது உலகெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.