பெங்களூரு

ர்நாடக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரான டி கே சிவகுமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர் டி கே சிவகுமார் தற்போது கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 78 எம் எல் ஏக்களையும் 2 சுயேச்சை எம் எல் ஏக்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளார்.   அவர்கள் தற்போது அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர்.    சிவகுமார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார்.

அந்த பேட்டி விவரம் வருமாறு

கே : நீங்கள் பாஜகவின் ஆள் பேரத்தை தடுத்து நிறுத்தியவர்களில் முதன்மையானவர் என்பது குறித்து…..

ப : இது ஒரு கூட்டு முயற்சி.  .இந்த நிகழ்வுக்கு அனைத்து கட்சியினருக்கும் பொறுப்பாவார்கள்.  அனைவரும் சேர்ந்து ஒரு மதச் சார்பற்ற அரசை கர்நாடகாவில் அமைக்க பாடு பட்டோம்.  நான் இந்திரா காந்தி குடும்பத்தின் தொண்டன்

கே : கட்சி உங்களுக்கு இந்த விவகாரத்தில் சுதந்திரம் அளித்திருந்தது உங்களுக்கு உதவியதா?

ப : ஆம்.   நான் எனக்கு எங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   அனைத்து மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலால் என்னால் என் பணியை செய்ய முடிந்தது.

கே : உங்கல் கட்சியை சேர்ந்த பிரதாப் கௌடா பாடில் மற்றும் ஆனந்த் சிங் காணாமல் போனதால் பதட்டம் உண்டானதா?

ப : நான் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் திரும்பி வருவார்கள் என சொல்லிக் கொண்டிருந்தேன்.  நான் அவர்களுடன் தொடர்பில் இருந்தேன்.  அவர்கள் பாஜகவை சேர்ந்த நண்பர்களால் கடத்திச் செல்லப்பட்டனர்.  இருந்தும்  நான் அவர்களுடன் தொடர்பில் இருந்தேன்.    அவர்களை பாஜக வெளியே விடாமல் அடைத்து வைத்திருந்தது.  ஆனால் அவர்கள் வெளியேறி சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

கே : நீங்கள் அனைவரும் தனி விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது சரியான தகவலா?

ப : ஆம்.   நாங்கள் ஒரு தனி விமானம் பதிவு செய்திருந்தோம்.  ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்காததால் பேருந்து மூலம் பயணம் செய்தோம்.    இன்னும் 15 நாட்கள் அவகாசம் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் அணி மாறி இருக்க மாட்டோம்.

கே : நீங்கள் உங்கள் உறுப்பினர்களுக்கு என்ன உத்திரவாதம் அளித்துள்ளீர்கள் ?

ப : நாட்டின் நலனுக்காக ஒரு நல்ல மற்றும் மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என உறுதி அளித்துள்ளோம்.  அதனால அவர்களை நாங்கள் சிறு சிறு விஷயங்கள் அளிப்பதாக கூறவில்லை.

கே : அடுத்து அமைய உள்ள அரசில் எத்தனை காங்கிரஸார் பங்கு பெறுவார்கள்,  நீங்கள் அமைச்சரவையில் பங்கு பெறுவீர்களா?

ப : எனக்கு தெரியாது.  எங்கள் தலைவர்கள் இது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.  ஆனால் காங்கிரஸும் மஜதவும் இணைந்து ஒரு மதசார்பற்ற அரசை அமைக்கும் என்பது உறுதி

கே : நீங்கள் உதவி முதல்வர் ஆவீர்களா?

ப : அதை எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள்

கே : நீங்கள் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவீர்களா?

ப :  இது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை