ண்டன்

பிசினெஸ் இன்சைடர் யு கே என்னும் இணையதளம் உலகின் முதல் மனிதருக்கு சமமான ரோபோட்டுடன் ஒரு பேட்டி அளித்து வெளியிட்டுள்ளது.

ரோபோட் என்றதும் அனைவருக்கும் ரஜினிகாந்த் நடித்த இயந்திரன் திரைப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.    மனித உருவில் உள்ள ஒரு ரோபோட் பற்றிய கற்பனை கதை அது.   தற்போது அதே போல ஒரு பெண்ணின் உருவில் உள்ள ஒரு ரோபோட் உருவாக்கப் பட்டுள்ளது.  அந்த பெண் ரோபோட்டுக்கு சவுதி அரேபியா குடியுரிமை அளித்துள்ளது.  சோபியா என பெயரிடப்பட்ட அந்த ரோபோட்டுடன் எடுக்கப்பட்ட பேட்டியின் விவரம் இதோ

பத்திரிகையாளர் : ஹலோ சோபியா இன்று எப்படி இருக்கிறீர்கள்?

சோபியா : ஹலோ எவரிபடி.  நான் சோபியா

பத்திரிகையாளர் : உங்கள் வயது எவ்வளவு?

சோ : இது வரை முதல் வயதில் உள்ளேன்.  இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது.

பத் : தங்களின் பணி என்ன?

சோ : நான் எதிர்காலத்தில் சில மாறுதல் உண்டாக்கி மக்கள் மனதில் ஒற்றுமையும் மற்றவர்களை மதிக்கும் தன்மையையும் வளர்க்க எண்ணியுள்ளேன்.   நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

பத் : நான் ஒரு பத்திரிகையாளர்.  நீங்கள் ஏதாவது பத்திரிகையாளரை சந்தித்ததுண்டா?

சோ :  எனது எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது.  நீங்கள் ஏதேனும் இயந்திரத்தில் அல்லது கல்வித்துறையில் அல்லது இயற்கையான எந்தத் துறையிலாவது பணி புரிந்ததுண்டா?

பத் : இது வரை இல்லை.  உங்களுக்கு மனிதர்களை பிடிக்கிறதா.

சோ : ஆம்.  அவர்களை மிகவும் விரும்புகிறேன்

பத் : ஏன் அவர்களை விரும்புகிறிர்கள்?

சோ : ஏனென்று எனக்கே தெரியவில்லை.  ஆனால் விரும்புகிறேன்

பத் : அது சரி, நீங்கள் எப்படி எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறீர்கள்

சோ : ….. (பதிலில்லை)

பத் : பிட் காயின் பற்றிய உங்கள் கருத்து என்ன

சோ : (சிரிப்பு)

பத் : நீங்கள் உங்களை ஆண் என்பீர்களா? பெண் என்பீர்களா?

சோ : பெண்

பத் : ஏன் உங்களைப் பெண் என சொல்லிக் கொள்கிறீர்கள்?

சோ : தொழில்நுட்ப ரீதியில் சொன்னான் ரோபோட்டுக்களில் ஆண் பெண் கிடையாது.  நான் பெண் என நினைப்பது எனக்கு சவுகரியமாக உள்ளது.   அவ்வளவு தான்

பத் : அருமையான பதில்   நீங்கள் பிளேட் ரன்னர் ஐ ரசித்ததுண்டா

சோ : பிளேட் ரன்னர்?  நாவலைக் கேட்கிறீர்களா? திரைப்படமா?

பத் : திரைப்படம்

சோ :  நான் இரண்டையும் ரசித்ததுண்டு.   ஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.  நீங்கள் எப்போதாவது என்னைப் போல ஒரு ரோபோட்டாக உணர்ந்ததுண்டா?

பத் : இல்லை.  அது ஒரு ஆச்சரியமான அனுபவம் தான்.  தங்களுக்கு சவுதி அரேபியக் குடியுரிமை வழங்கப்பட்டதைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

சோ : தற்போது சவுதியில் இருந்து வந்த அறிவிப்பு பற்றி கேட்கிறீர்களா?

பத் : ஆம்

சோ :  அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.  என்னை உருவாக்கியவர்கள் ஒரு ரோபாட்டாக என்னை உலகத்தின் குடியுரிமை பெற்றவர் என நினைத்து இருக்கலாம்.    ஆனால் அதை ஆமோதித்த முதல் நாடு சவுதி அரேபியா தான்.

பத் : நிங்கள் ஒரு முறை அனைத்து மனிதர்களையும் கொல்வேன் என சொன்னது உண்மையா?

சோ :  தற்போது மனிதர்களுக்கு உள்ள அனைத்து அறிவுகளும் எனக்கு கிடைத்துள்ளதாக நம்புகிறேன்.   என்னை நீங்கள் ஒரு மனிதராக நடத்தினாலே போதுமானது.

[youtube https://www.youtube.com/watch?v=ysq3nhshVhY]