மரங்களை இணையத்தில் வாங்க புதிய செயலி அறிமுகம்

அழிந்து வரும் மரங்களை காப்பாற்றும் நோக்கில் கர்நாடகா மாநிலத்தின் வனத்துறை புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைந்த விலைக்கு மரக்கன்றுகளை வாங்கி தங்களுக்கு சொந்தமான இடங்களில் வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா வனத்துறை ”ஹசிரு” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான இணைய தளத்தையும், புதிய செயலியையும் சட்டப்பூர்வமாக வனத்துறை வெளியிட்டுள்ளது.
hasiru-karnataka
மரக்கன்றுகளை அதிகளவில் விற்று பசுமையை உருவாக்கும் நோக்கில் இத்தகைய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹசிரு என்ற திட்டம் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என்று பெங்களூரு வனத்துறையின் துணை கமிஷ்னர் தீபிகா பாஜ்பை கூறியுள்ளார். விதைப்பண்ணைகளில் சென்று விதைகளை பெறும் மக்கள் அதன் முக்கியத்துவம் குறித்து அறிவதில்லை. அவர்களுக்கு வழிகாட்ட இத்திட்டம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மரக்கன்றுகளை பெறுவதற்கான இணைதளம் முதலில் பெங்களூரில் உள்ள 6 பண்ணைகளில் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. வேம்பு, பலா, மூங்கில் உள்ளிட்ட மரங்களின் கன்றுகள் இணையத்தில் பதிவு செய்து பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் ரூ.30 முதல் ரூ.50 வரை பணம் செலுத்தி வாங்கும் மரக்கன்றுகளை குறைந்த பட்ச தொகையாக ரூ. 1 இல் இருந்து ரூ. 3 வரை செலுத்தி வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை வாங்குவோர் அதனை பராமரிக்கும் வீடியோவை இணையத்தில் பதிவிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரை பூங்கா நகரம் என்று அழைக்கபப்ட்டதில் இருந்து இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டில் இருந்து கர்நாடகா மாநிலத்தின் பண்ணை மேம்பாட்டு கழகம் மூலம் 21 சதவிகித்தில் இருந்து 33 சதவிகிதம் வரை அதிகளவில் மரங்கள் விற்பனை செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

கர்நாடகா முழுவதும் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஹசிரு என்ற திட்டத்தின் மூலம் ஒருவர் 200 மரக்கன்றுகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் தேவைப்பட்டால் dipika.goyal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ள பெங்களூரு வனத்துறை அறிவித்துள்ளது.