புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அறிமுகம்!

டில்லி,

புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் பண மதிப்பிழப்பு அறிவித்தபிறகு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட இருப்பதாகவும், அதற்கான பிரிண்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புதிய நோட்டு, பழைய நோட்டு போன்றே, அதே நிறத்தில் இருக்கும் என்றும், அதில், ரிசர்வ் வங்கி கவர்னர்  உர்ஜித் பட்டேலின் கையெழுத்திடப்பட்டிருக்கும் என்றும், இந்த புதிய நோட்டு களில் ‘எஸ்’ என்ற எழுத்தை கொண்டு வரிசை எண் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.