நெட்டிசன்:
வாட்அஸ்அப் கவிதை:
1
பெட்டிகளில் அடைக்கப்பட்டு –  பதுக்கல்
கருப்பனாய் மாறினேன்.
தேர்தலை மாற்றினேன் ! – பல
தேர்வுகளை மாற்றினேன் !
காட்சிகளை மாற்றினேன் ! – பலர்
கனவுகளை மாற்றினேன் !
நீதிகளை மாற்றினேன் ! – பலரின்
நிதிகளையும் மாற்றினேன் !
கண்டெய்னரில் பிடிபட்டேன்! – ஆனால்
கர்வத்தோடு வெளிவந்தேன் !
அய்யகோ… நானின்று
கடலை மடிக்கும் வெற்று காகிதமனேன் !
ஒத்த ரூபாய் சிரிக்கிறது ! பத்து ரூபாய் சிரிக்கிறது !
அத்தனைக்கும் மதிப்புண்டு ! நான் மட்டும் நாதியிழந்தேன் !
நான் போட்ட ஆட்டத்துக்கு ….. நாதியத்து நிற்கின்றேன் !
மானுடனே கேள் !
பத்தும் செய்த எனக்கே இக்கெதியெனில்
உன் நிலையை யோசித்திடு ……..
ஆட்டத்தை நிறுத்திவிடு !!
தப்பான ஆட்டத்தை நிறுத்திவிடு !!
லஞ்சம் தவிர்த்து ! நெஞ்சம் நிமிர்த்து !
இப்படிக்கு
1000 ரூபாய், 500 ரூபாய்.
 
(