சென்னை:

குற்றவியல் வழக்குகளின்போது விசாரணை அதிகாரி, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு குற்றவியல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் ஆஜராகாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில்,  குற்றவியல் வழக்குகளின் மேல்முறையீட்டு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும், தவறும் பட்சத்தில் விசாரணை அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள்  வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், விசாரணை அதிகாரிகள் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தடைபடுவதாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், இதன் காரணமாக நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கமடைவதாகவும் கூறி உள்ளனர்.