தமிழகத்தில் தொழில்முதலீடு: துபாய் பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை:

மிழகத்தில் தொழில்முதலீடு செய்வது தொடர்பாக துபாய் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யுடன் இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அமைச்சர்கள் வெளிநாடு சென்றிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்கா, துபாய் உள்பட பல நாடுகளுக்கு சென்று தொழில் முதலீடு பெறும் வகையில் அந்நாடுகளின் தொழில்அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த பயணத்தின்போது, துபாயில், அந்நாட்டு தொழிலதிபர்களுடன் சந்திப்பு நடத்திய எடப்பாடி அந்நாட்டின் தொழில் முதலீட்டாளர்களுடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் தொழிற் பூங்கா அமைப்பது தொடர்பாக துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாகவும் , தொழில்பூங்கா அமைப்பது தொடர்பாகவும், பயோடீசல், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி, வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும்,

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள், என்ன மாதிரியான தொழில்கள் தொடங்கலாம், எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்  என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக துபாய் முதலீட்டாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்து உள்ளார்.\

:

You may have missed