மும்பை

கொரோனா பாதிப்பின் காரணமாகப் பங்குச் சந்தையில் நேற்று கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்ற மாதத்தில் இருந்தே கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

சென்ற ஒரு மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.5.68 லட்சம் கோடி இழந்தனர்.

கடந்த 27 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி அன்று மீண்டும் பங்குச் சந்தையில் ரூ.3.35 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

நேற்று முன் தினம் அதாவது மார்ச் 31 அன்று பங்குச் சந்தை சற்று ஏற்றம் கண்டது.

ஆனால் நேற்று மீண்டும் சரிவு ஏற்பட்டது.

நேற்றைய முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸில் 1203.18 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில் 343.95 புள்ளிகளும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று முதலீட்டாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.3.21 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் நாளில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.