ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: குற்றம் சாட்டப்பட்ட 6 அரசு அதிகாரிகளுக்கும் ஜாமின்

டெல்லி:

.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, அவருக்கு  கீழ் பணியாற்றிய 6 அரசு அதிகாரிகளுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரத்திற்கு கீழ் பணியாற்றிய 6 அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியுள்ளது.