ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் ப.சி. சார்பில் வழக்கறிஞர் ஆஜர்

டில்லி:

ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில்  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், இன்றைய விசாரணைக்கு சிதம்பரம் ஆஜராகாமல், அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.

அதில், டில்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதால், ஜூன் 6-ம் தேதிக்கு பிறகு தாம் நேரில் ஆஜராவதாக கூறி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்,  ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரி டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், பாட்டியாலா நீதி மன்றம் சிதம்பரத்தை ஜூன் 5ந்தேதி வரை  கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, இன்று சிபிஐ விசாரணைக்கு ப.சி. ஆஜாராகாமல், தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார்.

கார்ட்டூன் கேலரி