ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்

டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றம் அறிவுறுத்தலின் பேரில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இன்று  கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐயும்,  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டியிருப்பதாலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால், அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதி மன்றம் கார்த்திக் சிதம்பரத் துக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியது.

இந்த நிலையில், இன்று டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் அப்ரூவர் ஆக இந்திராணி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி