ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமின் 27ந்தேதி வரை நீட்டிப்பு

டில்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், வரும் 27-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு காரணமாக சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு,  திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, அமலாக்கத்துறை கைது செய்ய முயன்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், 22ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.யு.சந்திரசூட்  தலைமையிலான அமர்வு விசாரித்து, வழக்கை  உச்சநீதி மன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் மீதான ஜாமின் 27ந்தேதி வரை நீடிக்கும் என்றும், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை   27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: INX Media case: Karti Chidambaram gets relief from arrest till April 27, ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு!
-=-