மற்றுமொரு விஜய சாந்தியா இந்த IPC 376 நந்திதா ஸ்வேதா…?

நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் படம் உருவாகி வருகிறது. பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது.

ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன்.

இப்படத்திற்கு கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி