ஐபோன் ஆதிக்கம்: சாம்சங் ஆண்டிராய்டிலிருந்து வெளிவருமா?

 

ஸ்மார்ட் போன் உலகில் ஆன்டிராய்டு மற்றும் ஐ ஓ எஸ் மென்பொருளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ஐ ஓ எஸ் ஸை காட்டிலும் ஆன்டுராய்டு மென்பொருளே அதிகமாக விற்பனையாகிறது. உலக வர்த்தக சந்தையில் சுமார் 80 சதவீதம் அளவு ஆன்டிராய்டு ஆன்டிராய்டு மென்பொருளே ஆக்கிரமித்துள்ளது. ஏனினும் இதை வைத்து ஆன்டிராய்டு மென்பொருளின் வெற்றியை பிரகடனபடுத்த முடியாது.

ios

உலக வர்த்தக சந்தையில் ஆன்டிராய்டு அதிகமாக விற்கப்பட்டாலும், ஆப்பிளின் ஐ ஓ எஸ் மென்பொருளிடம் தோல்வியையே சந்திக்கிறது. அது எப்படி? எப்படியெனில் இரண்டு மென்பொருளின் மூலம் வரும் இலாபத்தை வைத்து பார்க்கையில், ஆப்பிளின்  ஐ ஓ எஸின் கையே ஓங்குகிறது.

ஐ ஓ எஸ் பயன்படுத்தும் ஒரே நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது . ஆன்டுராய்டு மென்பொருளை பல செல் போன் நிறுவனங்கள் பயன்படுத்தி னாலும் அதில் சாம்சங் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ஐ ஓ எஸுக்கு ஆன்ராய்டு இந்தளவுக்காவது போட்டியாக இருப்பதற்கு சாம்சங் நிறுவனமே காரணம்.

ஆன்டிராய்டு பயன்படுத்தும் நிறுவனங்களில் சாம்சங்கிடம் யாராலும் போட்டி போடமுடியவில்லை.

androdod

மோட்டோரோலா, கூகுல் நெக்ஸஸ் போன்ற நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தபோதும், வியாபார சந்தை விரிவாக்கத்தில் சாம்சங்கிடம் போட்டி போட முடியவில்லை.

காரணம் சாம்சங் விற்பனையில் ஆப்பிளை ஈடுசெய்கிறது. மேலும் ஆப்பிளுக்கும் சாம்சங்க்கும் இடையே போட்டி என்ற மனநிலையை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகிறது.

உதாரணமாக சாம்சங் S7 வரிசையிலுள்ள மொபைல்கள் குறைந்த விலை நிறைந்த வசதி என்ற அடிப்படையில் பல இடங்களில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளுகிறது.

சாம்சங்குக்கு ஆன்டிராய்டு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆன்ராய்டுக்கு  சாம்சங் முக்கியமாகிறது. இந்த இருநிறுவனங்களும் ஒன்றாக இருக்கும் வரை எவருக்கும் எந்த பாதிப்புமும் இல்லை. இது சாம்சங் நிறுவனத்திற்கும் தெரியும் , ஆன்டுராய்டின் உரிமையாளரான கூகுல் நிறுவனத்தும் தெரியும்.

ஏன்  இது ஆப்பிளுக்கு மட்டும் தெரியாதா என்ன?

கார்ட்டூன் கேலரி