ஐபோனில் அற்புதமான செயல்பாடு மற்றும் உயர்தர தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் ஐபோன் பயனாளர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய குறை ஐபோனின் இரு சிம்கார்டுகள் (Dual SIM) போடும் வசதி இல்லை, மற்றும் எக்ஸ்டர்னல் மெம்மரி கார்டு போடும் வசதி இல்லை என்பதாகும்.

இதில் முதல் குறையை தீர்த்து வைக்க ஐஃபோன் முடிவு செய்துள்ளது. இரு சிம்கார்டுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கான பேட்டண்ட் வசதியை கோரி அது அமெரிக்கா மற்றும் சீனாவில் விண்ணப்பித்துள்ளது. எனவே விரைவில் ஐஃபோன்கள் இரு சிம்கார்டு தொழில்நுட்பத்தை தாங்கி வரும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த தொழில் நுட்பம் அடுத்த மாடலிலேயே அறிமுகப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Apple Going to Make Dual SIM iPhones Soon, iPhones with Dual Sim