சென்னை:  உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசன்  நாளை (9ம் தேதி) சென்னையில்  தொடங்குகிறது.  இதற்கிடையில், நாடு முழுவதும் கொரேனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதன் பாதிப்புக்கு பல்வேறு ஐபிஎல் வீரர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி, ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஊடகத்தின் ஊழியர்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.  இது ஐபிஎல் நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் 14வது சீசன் 9ம் தேதி தொடங்குகிறது. பொட்டிகள் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு (2020) ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால்,  இந்தாண்டு இந்தியாவில்  நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணி விரர்களும் ஹோட்டல் அறையில் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால்,  பொதுமக்கள் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால. வீரர்கள் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டு  தீவிர பயிற்சியை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், தீவிர பாதுகாப்பையும் மீறி பல வீரர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

‘கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,  ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி, பார்வையாளர்களின்றி நடைபெறும் என்றும், பிசிசிஐ சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள், அணி நிர்வாகிகள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒளிபரப்பு ஊழியர்கள் 14 பேருக்குதொற்று உறுதியாகி உள்ளது.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஐபிஎல் வீரர்களான,  கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா,  மும்பை மைதான ஊழியர்கள் சிலர், டெல்லி கேபிடல்ஸ் வீரர் அக்ஸர் படேல், சிஎஸ்கே அணியின் சமூக ஊடக நிர்வாகி என பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததால் அவர்கள் குவாரண்டினில் உள்ளனர்.

அதுபோல ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு மார்ச் 22ம் தேதியே கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததாகவும், அதனால் அவர் இன்னும் குவாரண்டினில் இருப்பதாகவும், ஆர்சிபி அணியின் மருத்துவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பெங்களூரு அணி வீரர் டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத நிலையில் கொரோனா உறுதியானதால் டேனியல் சாம்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னையில் நாளை  முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஐபிஎல் வீரர்கள் 4 பேருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்யும் துறையை கையாளும், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என 14 பேருக்கு கொரோனா உறுதி அவர்கள் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில்  தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ‘ இதனால்,  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பையில் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.