ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று 2வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
ஐதராபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
20 ஓவர்களில் டில்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.